செந்தமிழ்சிற்பிகள்

லா.ச.ராமாமிர்தம் (1916 - 2007)

லா.ச.ராமாமிர்தம்  (1916 - 2007)

அறிமுகம்

லா. ச. ராமாமிர்தம் (அக்டோபர் 30, 1916 - அக்டோபர் 30, 2007) லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் 1916ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம், பெங்களூரில் பிறந்தவர்.  இவருடைய தந்தை சப்தரிஷி, தாய் ஸ்ரீமதி.   தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்திலிருந்தே எழுதி வந்தவர்.  இவர், தனது 92வது பிறந்த நாளில் இறந்தார்.

லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்த லா. ச. ராவை தன்னுடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற புதினத்தை எழுத வைத்தது. 

இவருக்கு 1989-ல் சாகித்திய அகாதமி விருது பெற்றுத் தந்த சுயசரிதை சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது.

லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" செக் மொழியில் இவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினார்.

இவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். இவருடைய "புத்ர" மற்றும் "அபிதா" போன்ற புதினங்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் ஆகும். "சிந்தாநதி" இவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டது.